தியானத்தில் மனம் வெளிப்படுத்தும் ரகசியங்கள்
தியானத்தில் மனம் வெளிப்படுத்தும் ரகசியங்கள். மனதுடன் பேசுவதற்கும், மனதிடம் இருந்து இரகசியங்களையும், தகவல்களையும் அறிந்துக் கொள்வதற்கும் ஒரு எளிய வழிமுறை உள்ளது. மனிதர்களின் இடையூறும், அதிக சப்தங்களும் இல்லாத அமைதியான இடத்தில் தளர்வாக அமர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த தியான முத்திரையைப் பயன்படுத்துங்கள். தியானத்தில் அமைதியாக அமர்ந்து, உங்களை கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் சுவாசத்தைக் கவனியுங்கள். உங்கள் மூச்சுக் காற்று எவ்வாறு உடலுக்குள் செல்கிறது என்பதைக் கவனியுங்கள். உடலின் உள்ளே அந்தக் காற்று எங்கெல்லாம்