நோய்களின்றி வாழ கற்றுக் கொள்ளுங்கள்
நோய்களின்றி வாழ கற்றுக் கொள்ளுங்கள். இளமைக் காலம் முழுவதும் நாய் படாத பாடுபட்டு சிறுக சிறுக பணம் சேர்த்து அவற்றை அனுபவிக்காமல் முதுமை காலத்தில் பலர் மருத்துவ துறையின் இழந்து விடுகிறார்கள். நோய்க்கு மருத்துவம் செய்வதாக எண்ணிக் கொண்டு மருந்து கம்பெனிகளிடமும் மருத்துவமனைகளிடமும் ஏமாந்து போகும் அவல நிலை யாருக்கும் உண்டாகக் கூடாது. சேர்த்த பணம் முழுவதையும் இழந்தது மட்டுமல்லாமல், சொத்து சுகத்தை விற்று, கடன்பட்டு கடைசியில் நோயாளிகளாகவே பலர் மரணிக்கிறார்கள். இல்லாத நோய்களுக்கு வைத்தியம் பார்த்ததில்