வாழ்க்கையில் இன்பமும் துன்பமும்
வாழ்க்கையில் இன்பமும் துன்பமும். மனித வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான். உலக வாழ்க்கை என்பது உயிர்களுக்கு பயிற்சியாகவும் பாடமாகவும் இருப்பதினால் புழு பூச்சி முதல் மனிதர்கள் வரையில் எல்லா உயிரினங்களுக்கும் இன்ப துன்ப அனுபவங்கள் நிச்சயமாக இருக்கும். வாழ்நாளில் இன்ப துன்பங்களை அனுபவம் செய்யாத மனிதர்கள் என்று இந்த இவ்வுலகில் யாரும் இருந்ததில்லை இனி இருக்கவும் மாட்டார்கள். மண்ணும் கழிவும் கலந்து பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் தங்கம் நெருப்பால் சுடப்பட்டு, சுத்தியால் தட்டப்பட்டு நகையாக வடிவம்