காதலி
உன்னைக் காணும் வேளைகளில்திருவிழா சந்தையின் நடுவில்ராட்டினத்தை முதன்முதலாய்பார்க்கும் குழந்தையைப் போன்று அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும்வியந்து பிரமிப்புடன் பார்க்கிறேன்நெருங்கிவரத் துடிக்கிறது மனதுஇருந்தாலும் உள்ளுக்குள் அச்சம் உன்னைப் பார்க்கவும், பேசவும்கைகோர்த்து நடக்கவும், சிரிக்கவும்தழுவி இதழில் முத்திரையிடவும்ஆசை கலந்த பயமாக இருக்கிறது வானவில்லின் ரசிகனாய்சலனமின்றி ரசித்துவிட்டுஉன் நினைவுகளை ஓவியமாய்சுமந்து திரும்பிச் செல்கிறேன்