Month: December 2022

Month: December 2022
ஆரோக்கியம்

மனிதனின் உண்மையான ஆரோக்கியம்

மனிதனின் உண்மையான ஆரோக்கியம். ஒரு மனிதனின் உண்மையான ஆரோக்கிய நிலையை உடலின் வெளிப்புறத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அறிந்துகொள்ள முடியாது. உடலின் வெளிப் பகுதி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், உடலின் வெளியில் குறிப்பிடும் அளவுக்கு பாதிப்புகள் இல்லாமல் இருந்தாலும் கூட ஒரு நபர் நோய் கொண்டவராக இருக்கலாம். ஆரோக்கியம் என்று சொன்னாலே முழுமையான ஆரோக்கியம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். உடலின் உள்ளும், புறமும், மனமும் ஆரோக்கியமாக தடைகளின்றி தனது இயல்பில் இயங்க வேண்டும். தோலின்

Read More
நோய்கள்

எவையெல்லாம் நோய்கள்?

எவையெல்லாம் நோய்கள்? எவையெல்லாம் நோய்கள் அல்ல? ஒரு மனிதனின் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். எவையெல்லாம் நோய்கள்? எவையெல்லாம் நோய்கள் அல்ல என்பதை அறியாமல். உடலில் எந்த தொந்தரவுகள் தோன்றினாலும் அதைத் தடுக்க வேண்டும், அதைக் குறைக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இந்த தவறான பழக்கமே சில சிறிய தொந்தரவுகளும் கொடிய நோய்களாக மாறுவதற்குக் காரணமாக அமைகிறது. நோய்கள் எவ்வாறு உருவாகின்றன? “தீதும் நன்றும் பிறர் தர

Read More
ஆன்மீகம்

மனிதர்களின் பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு

மனிதர்களின் பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு. பௌத்த மதத்தின் நம்பிக்கையின்படி மனிதர்களின் பிறப்பும், இறப்பும், மறுபிறப்பும். மரணத்துக்குப் பிறகு சுவர்க்கம், நரகம், மறுபிறப்பு, இயற்கையோடு இணைதல் என்று பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன; இருந்தும் மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கப்போகிறது? என்பதுதான் பெரும்பாலான மனிதர்களின் கவலையாக இருக்கிறது. குறிப்பாக முதியவர்களுக்கு. மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? என்பன போன்ற விசயங்கள் புரியாததால், பலருக்கு மரணம் என்றாலே உள்ளுக்குள் நடுக்கம் ஏற்பட்டுவிடுகிறது. மரணம் என்ற வார்த்தையைக் கூட

Read More
தியானம்

தியானம் முறையாக பலனளிக்கிறதா?

நீங்கள் செய்யும் தியானம் முறையாக பலனளிக்கிறதா? தியானம் என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு நிலை. தியானத்தை யாராலும் செய்ய முடியாது, அது சுயமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. தியானப் பயிற்சிகள் என்று நாம் சொல்வதெல்லாம் தியானம் நடைபெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தருவதைத்தான். நாம் செய்யும் தியானப் பயிற்சி நமக்குப் பலனளிக்கிறதா என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது? தியானத்தில் வளர்ச்சி என்பது மனதின் பக்குவ நிலைதான். தியானத்தை நோக்கி நாம் செல்வது, நம் சுயத்தை நோக்கிச்

Read More
தியானம்

ஒரு நிமிடத் தியானம்

ஒரு நிமிடத் தியானம். இன்றைய அவசர உலகில் தியானம் செய்வதற்காக நேரத்தை ஒதுக்குவது என்பது பலருக்குக் கடினமான காரியமாக உள்ளது. ஆனால் ஒரு நிமிடம் என்பது மிகக் குறைந்த காலகட்டம் தானே? ஒரு நிமிடத்தில் தியானம் செய்வது என்பது, அவசரத்தில் செய்கின்ற அரைகுறை காரியமல்ல. தியானம் செய்யும் நேர அளவும் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. தினம் தியானப் பயிற்சிகள் செய்பவர்கள் அவற்றைத் தொடர்ந்து செய்துவரலாம். வேண்டுமென்றால் இதையும் சேர்த்துச் செய்யலாம். தியானம் செய்யாதவர்கள், இந்த தியானப் பயிற்சியைச் செய்துபாருங்கள்.

Read More
தியானம்

தியானத்துக்கு ஒரு அறிமுகம்

தியானம் என்பது என்ன? தியானத்துக்கு ஒரு அறிமுகம். தியானம் என்பது உடல், மனம், புத்தி மற்றும் உடலின் ஆற்றலைச் சீராகவும், நம் கட்டுப் பாட்டுக்குள்ளும் வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும், அதே நேரத்தில் இந்த உலக வாழ்க்கையை விழிப்புணர்வோடு வாழ்வதற்கும் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் பேருதவியாக இருக்கும். தியானம் என்பது மதம், தெய்வம், மற்றும் வழிபாடுகள், தொடர்புடையவை அல்ல. உண்மையில் தியானம் என்பது மனிதனின் இயல்பான நிலையாகும். தாயின்

Read More
தியானம்

தியானம் செய்யும் வழிமுறைகள்

1. விரிப்பு, பாய் அல்லது தடிப்பான துணியை விரித்து தரையில் வசதியாக அமர்ந்து கொள்ளவும். 2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து கொள்ளவும். 3. முதுகுத் தண்டை நேராக வைத்துக் கொள்ளவும். 4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும் தளர்வாகவும் அமர்ந்து கொள்ளவும். 5. பயிற்சியை வற்புறுத்தி செய்யக்கூடாது. 6. மூச்சுப்பயிற்சி செய்யவும். 7. மூச்சுப் பயிற்சி முடிந்ததும் தளர்வாகவும், அமைதியாகவும் அமர்ந்து கொள்ளவும். 8. இரு கைகளையும் தொடைகளின் மீது உள்ளங்கைகள்

Read More
நோய்கள்

ADR – எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள்

தலைப்புகள் பல நோயாளிகள் இன்று அனுபவித்துக் கொண்டு இருக்கும் பெரும்பாலான உடல் உபாதைகள் நோய்களினால் உருவானவை அல்ல மாறாக ஏ.டி.ஆரினால் உருவாக்கப்பட்டவை. ஆங்கிலத்தில் ADR என்று அழைக்கப்படும் இந்தத் தொந்தரவு, இக்காலகட்டத்தில் பல நோயாளிகளை வாட்டி வதைக்கும் தொந்தரவாக உருவெடுத்துள்ளது. உண்மையில் இப்படி ஒரு நோய் உருவாகி இருப்பதும், இந்த நோயினால்தான் நாம் பல உடல் உபாதைகளை அனுபவிக்கின்றோம் என்பதும் பல நோயாளிகளுக்குத் தெரிவதில்லை, மற்றும் தெரிந்துவிடாமல் மறைக்கப்படுகிறது. ADR என்றால் என்ன? ஏ.டி.ஆரின் முழு விளக்கம்

Read More
ஆரோக்கியம்

ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்

ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள். மனிதர்களின் ஆரோக்கியத்தை அளந்து பார்க்கும் சில வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவையில்லை. ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யவும் தேவையில்லை. கீழே குறிப்பிடப்பட்ட ஐந்து விசயங்களைக் கவனித்தாலே போதுமானது. 1. தரமான பசி2. தரமான தாகம்3. திருப்தியான உறக்கம்4. முழுமையான கழிவு நீக்கம்5. மன அமைதி தரமான பசி உழைப்புக்குத் தகுந்த பசி இருக்கவேண்டும். உழைப்பு குறைவாக இருந்தால் பசியின் அளவும் குறைவாக

Read More
மனம்

நோய்களைக் குணப்படுத்தும் மனம்

நோய்களைக் குணப்படுத்தும் மனம். நமது பாரம்பரியத்தில் மனதுக்கு மிகவும் முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அனைத்து சுபகாரியங்களையும் சடங்குகளையும் மனதைப் பிரதானமாக கொண்டே வடிவமைத்துள்ளார்கள். ஒரு ஆணையும் பெண்ணையும் தாம்பத்தியப் பந்தத்தில் இணைக்கும் நிகழ்வுக்குக் கூட, திருமணம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றும் நாம் துன்பத்தில், துயரத்தில், கவலையில் இருப்பவர்களை சந்திக்கும் போது கூறும் வார்த்தைகள் கூட “மனதைத் தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்”. “மனதைத் தளரவிடாதீர்கள்” என்பதாகத்தான் இருக்கின்றன. நோயாளிகளை சந்தித்து ஆறுதல்கள் கூறும் போது

Read More