ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்
ஆரோக்கியம் மீம்ஸ், நோய் நொடிகள் எதுவுமின்றி எப்போதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில ஆரோக்கிய டிப்ஸ்.
ஆரோக்கியம் மீம்ஸ், நோய் நொடிகள் எதுவுமின்றி எப்போதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில ஆரோக்கிய டிப்ஸ்.
இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம், இயற்கையைச் சார்ந்து வாழ்தல், என்றெல்லாம் குறிப்பிடுகிறார்களே; இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? எதனால் இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டும்? இயற்கையைச் சார்ந்த வாழ்க்கை முறைகளை பின்பற்றுபவர்களுக்கும், இயற்கை மருத்துவத்தை பின்பற்றுபவர்களுக்கும்; செயற்கையான வாழ்கை முறையையும், உணவு முறையையும், ஆங்கில மருத்துவத்தையும் பின்பற்றுபவர்களுக்கும்; வாழும் நாட்கள் ஏறக்குறைய ஒன்றாகத்தானே இருக்கின்றன. இயற்கையைப் பின்பற்றி வாழ்பவர்கள் மட்டும் 150 ஆண்டுகள் வாழ்வார்கள் என்றால் பரவாயில்லை. இயற்கை வாழ்வியலுக்கும், செயற்கை வாழ்வுக்கும், பெரிதாக ஒரு வித்தியாசம்
உண்ணா நோன்பும் ஆரோக்கியமும். உண்ணா நோன்பு என்பது பல்வேறு இனங்களில், மதங்களில் மற்றும் கலாச்சாரங்களில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு மரபாகும். நமக்கு வெளிப்படையாக தெரிந்து இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் உண்ணா நோன்பு இருப்பார்கள். சைவர்களும் வைணவர்களும் சில குறிப்பிட்ட நாட்களில் உண்ணா நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஒரு சிலர் வேண்டுதல் நிறைவேற உண்ணா நோன்பு இருப்பார்கள். உண்ணா நோம்பின் விரதங்கள் பல்வேறு வழிமுறைகளில் கடைப்பிடிக்கபட்டு வருகின்றன. ஒரு சிலர் நாள் முழுவதும் முழுமையாக உண்ணாமல் இருப்பார்கள், சிலர் பால்
முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது ஏன்? ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய வருடத்தில் ரமலான் மாதம் என்பது முஸ்லிம்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாகும். முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் உண்ணா நோன்பு நோற்பார்கள். காலையில் சூரியன் உதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரையில் உணவோ தண்ணீரோ அருந்த மாட்டார்கள். முப்பது நோன்பும் பூர்த்தியாகும் நாளை பெருநாளாக கொண்டாடுவார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விசயம். ரமலான் மாதத்தின் சிறப்பு என்பது உணவையும் தண்ணீரையும் தவிர்ப்பது அல்ல, அந்த
தங்க நகைகளை அடகு வைக்காதீர்கள். ஆத்திர அவசர நேரங்களில் தங்க நகைகளை அடகு வைப்பது இப்போது சகஜமாக நடக்கும் ஒரு விசயம், ஆனாலும் இது முடிந்தவரையில் தவிர்க்க வேண்டியது. தவிர்க்க முடியாத ஆபத்து அவசரக் காலங்களில் நகைகளை அடகு வைத்தும், மற்ற பொருட்களை அடகு வைத்தும், கடன் வாங்கியும், செலவு செய்வதை தவறு என்று சொல்ல முடியாது. அனைத்தையும் விட உயிர் விலை மதிப்பற்றது. ஆனாலும் இந்த பழக்கம் தொடர்ந்தால் நாளடைவில் பணம் தேவைப்பட்டால் அடகு வைத்துக்
கற்கள் பதித்த நகைகளை வாங்காதீர்கள். ஆபரணக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும், தங்க நகைகள் கூட சில காலங்களுக்குப் பிறகு மினுக்காமல் மங்கிவிடலாம், நகைகளின் அழகும் குறையலாம் ஆனால் கற்கள் பதித்த நகைகள் பல ஆண்டுகளுக்கு அழகாக இருக்கும். ஆனாலும்… ஆபரண நகைகளில் பதிக்கப்படுபவை பெரும்பாலும் வர்ணக் கண்ணாடிகளாக இருக்கும், அடுத்தது விலை மதிப்பில்லாது வர்ணக் கற்களாக இருக்கும். மிக மிக சொற்பமாகவே விலை மதிப்புடைய ஜாதி கற்கள் நகைகளில் பதிக்கப்படுகின்றன. ஒருவேளை ஜாதி
தங்கத்தில் முதலீடு ஆலோசனைகள். அதிகச் செல்வமும் வருமானமும் உள்ளவர்கள், நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் முதலீடு செய்கிறார்கள். சிறிதளவு பணமும் குறைந்த வருமானமும் உடைய நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இன்று வாங்கும் தங்கம் அவசரக் காலங்களிலும் முதுமைக் காலங்களிலும் உதவும் என்ற நோக்கத்தில் தான் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்குவதை ஒரு முதலீடாக பார்க்கிறார்கள். ஆனால் இதில் வருத்தமான ஒரு விஷயம் என்னவென்றால் தங்கம் வாங்கும் போதே செய்கூலி, சேதாரம், அரசாங்க வரி
தங்க நகைகளை வாங்குவோருக்கு ஆலோசனைகள். தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கும் போது பெரும்பாலும் அலங்காரப் பொருளாக மட்டுமல்லாமல் எதிர்காலச் சேமிப்பாகவும் பலர் வாங்குகிறார்கள். சேமிப்பாக வாங்கும் தங்கமும் நகைகளும் எதிர்காலத்தில் இலாபம் கொடுக்க சில டிப்ஸ். 1. விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு நகைகளை வாங்காதீர்கள். ஆசையிலும் அவசரத்திலும் நிதானம் இழந்து விடுவீர்கள். 2. கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை வாங்காதீர்கள். நகையில் பதிக்கப்படும் கற்களுக்கு பெரும்பாலும் மதிப்பு இருப்பதில்லை, ஆனால் தங்கத்தின் விலையைக் கொடுத்து அந்த கண்ணாடி அல்லது
தங்கம் நிரந்தர மதிப்புடையது. உலகம் இருக்கும் காலம் வரையில் தங்கம் பண்டமாற்று பொருளாகவும், பரிவர்த்தனை பொருளாகவும் நிலைத்திருக்கும். இன்று நாம் பயன்படுத்தும் காகிதப் பணம் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பாக பல வகையான பண வகைகள் பயன்பாட்டில் இருந்தன பின் பயன்பாட்டிலிருந்து அவை மறைந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கம் ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை போன்று; பல நாடுகளில், பல காலகட்டங்களில் அவற்றின் அரசாங்கங்கள் அன்று பயன்பாட்டில் இருந்த பணமும்
தங்கம் ஒரு சிறந்த நிலையான மூலதனம். மனிதர்களின் நாகரிகம் வளர தொடங்கிய காலம் முதலாக, மனிதர்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்று சிந்திக்க தொடங்கிய காலம் முதலாக; தங்கம் மனித வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்க தொடங்கிவிட்டது. தங்கம் அலங்காரப் பொருளாக மட்டுமே இல்லாமல், வியாபாரத்தில் பரிவர்த்தனை பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பொருளுக்குப் பொருள் என்ற பண்டமாற்று முறை மறைந்து தங்கத்தை