ஓட்டு உதிர் காலம் – தமிழ்நாட்டு அரசியல்
ஓட்டு உதிர் காலம் – தமிழ்நாட்டு அரசியல். இப்போது தமிழகத்தை… இல்லை இல்லை இந்தியாவையே தேர்தல் மேகம் சூழ்ந்துள்ளது. தமிழ் நாட்டின் சாபக்கேடு என்னவென்றால் தேர்தல் மேகம் சூழ்கையில் மட்டுமே மக்களுக்கு செழுமையும் உண்டாகும். தேர்தல் மேகம் கலைந்ததும் கோடைக் காலம் தொடங்கிவிடும். மக்களை துன்பங்கள் வாட்டியெடுக்கும். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று யார் வெற்றிப் பெற்றாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் உண்டாவதில்லை. காரணம் இங்கே நடப்பது ஆட்சி மாற்றம் அல்ல ஆட்சியில் இருப்பவர்களின் பெயர்கள்