Year: 2018

Year: 2018
திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 941

குறள் 941மிகினும் குறையினும் நோய்செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. குறளின் உரைபசியின் அளவைவிட மிகுதியாக உண்பதும், உடலுக்குத் தேவையான பொழுது ஓய்வும் உறக்கமும் கொடுக்காமல் இருப்பதும் சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடும் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. குறளின் விளக்கம்திருவள்ளுவர் காலத்தில் சித்த மருத்துவம் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டதால், திருவள்ளுவர் சித்த மருத்துவத்தை மேற்கோள் காட்டுகிறார். மருத்துவர்கள் தவறுசெய்யக் கூடும் என்பதனால் சித்த மருத்துவர்கள் என்று

Read More
திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 942

குறள் 942மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது அற்றது போற்றி உணின். குறள் உரைஇதற்கு முந்தைய வேளையில் உட்கொண்ட உணவு முழுமையாக ஜீரணமாகி விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்குத் தக்க உணவை உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது. குறள் விளக்கம்மனிதர்களின் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருப்பது இரண்டு விசயங்கள் தான் முதலில் உடலில் உண்டாகும் சக்திக் குறைபாடு, மற்றது உடலில் சேரும் கழிவுகள். ஜீரணம்

Read More
திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 943

குறள் 943அற்றால் அறவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. குறளின் உரைதினசரி வாழ்க்கைமுறை, செய்யும் தொழில் இவற்றுக்குத் தேவைப்படும் உடலின் சத்துக்களையும் ஆற்றலையும் அறிந்து. அந்த உடலின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதே, இந்த உடல் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க உதவும் வழியாகும். குறளின் விளக்கம்நமக்கு முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இன்றைய தலைமுறை மனிதர்களுக்கு அதிகமாக நோய்கள் உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை உண்பதுதான். ஒரு

Read More
திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 944

குறள் 944அற்றது அறிந்து கடைப்பிடித்து, மாறல்ல துய்க்க துவரப் பசித்து. குறளின் உரைஆசைக்கும் சுவைக்கும் அடிமையாகி அதிகமாக உண்ணாமல். உண்ட உணவு ஜீரணமாகி, நன்றாக பசிக்கும்போது உடலுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய உணவுகளை உட்கொள்வதை வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்க வேண்டும். குறள் விளக்கம்ஆரோக்கியமாக வாழ விரும்புவோர், முந்தைய வேளையில் உண்ட உணவு ஜீரணமாகி மீண்டும் பசித்தால், உடலுக்கு ஒத்துக்கொள்ளும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்வேன் என்பதை, வாழ்க்கை நெறியாகவே வைத்திருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். பிடித்த

Read More
திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 945

குறள் 945மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின், ஊறுபாடு இல்லை உயிர்க்கு. குறளின் உரை:வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாதவாறு, உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை விளக்கி. உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகளை மட்டுமே உட்கொண்டால். இந்த உடலில் வாழும் உயிர் நோய்களினால் வேதனை அடையாது, துன்பத்தையும் அனுபவிக்காது. குறள் விளக்கம்வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாமல் இருக்க, உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொண்டு. உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்த்தால்,

Read More
திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 946

குறள் 946இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும், கழிபேர் இரையான்கண் நோய். குறளின் உரைஉணவை பசியின் அளவுக்கு குறைவாக உண்பவனிடத்தில் ஆரோக்கியம் நிலைத்து நிற்பதைப் போலவே, பசியின் அளவுக்கும் மிகுதியாக உண்பவனிடத்தில் நோய்கள் நிலைத்து நிற்கும். குறள் விளக்கம்பசி உண்டான பிறகு, பசியை அறிந்து உண்பவன் எந்த நோய்க்கும் ஆளாகாமல், ஆரோக்கிய வாழ்வில் நிலைத்திருப்பான். அதைப்போலவே பசியில்லாமல் ஆசைக்கும் இச்சைக்கும் ஆளாகி உண்பவன், அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் வரையில் நிரந்தர நோயாளியாகவே இருப்பான், என்கிறார் திருவள்ளுவர். பசியையறிந்து பசியின்

Read More
திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 947

குறள் 947தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின், நோயள வின்றிப் படும். குறளின் உரைதன் உடலுக்கு எந்த உணவு தேவை, எந்த அளவு தேவை என்பதை அறியாமல். அளவுக்கு அதிகமாக உண்பவருக்கு அளவில்லா நோய்கள் உண்டாகும். குறள் விளக்கம்நான் எந்த இனத்தைச் சார்ந்தவன்? என் உடலமைப்பு எப்படிப்பட்டது? என் உடலமைப்புக்கு ஏற்ற உணவு முறை எது? என்று அறிந்து உண்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். உடலமைப்புக்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்பவருக்கும், அளவுக்கு மிகுதியாக உண்பவருக்கும், பல நோய்கள் அண்டும்

Read More
திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 948

குறள் 948நோய்நாடி நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். குறளின் உரைஒருவரின் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்த வேண்டுமாயின். அது என்ன நோய் என்பதை அறிந்து. அந்த நோய் உடலில் எங்கு எவ்வாறு உருவானது என்பதை ஆராய்ந்து. அந்த நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவத்தையும் அறிந்து. அந்த மருத்துவத்தை பிழையில்லாமல் முறையாக செய்ய வேண்டும். குறள் விளக்கம்முந்தைய குறள்களில் நோய்கள் அண்டாமல் வாழ வழி சொன்ன திருவள்ளுவர். அவற்றையும் மீறி நோய்கள் உண்டானால். அவற்றை குணப்படுத்திக்கொள்ள சில

Read More
திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 949

குறள் 949உற்றான் அளவும் பிணியளவும் காலமும், கற்றான் கருதிச் செயல். குறளின் உரைமருத்துவம் பயின்றவர்கள் நோயை முறையாக குணப்படுத்த. நோய்வாய்ப்பட்டவரின் உடல் நிலையை அறிந்து. நோய்வாய்ப்பட்டவரின் நோயின் தன்மையை, நோயின் அளவை, நோயின் வீரியத்தை அறிந்து. அந்த நோயை குணப்படுத்த தகுந்த நேரம் காலம் பார்த்து. முறையாக மருத்துவம் செய்ய வேண்டும். குறள் விளக்கம்இந்தக் குறளை மருத்துவர்களுக்காக திருவள்ளுவர் கூறுகிறார். ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த, சில படிநிலைகளை வழிகாட்டுகிறார். முதலில் நோயாளியின்

Read More
திருக்குறள்

மருந்து அதிகாரத்தின் விளக்கம்

மருந்து அதிகாரத்தின் விளக்கம். மருந்து என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் மருந்தை பற்றி எதுவுமே கூறவில்லையே என்று சிலருக்கு சந்தேகம் உண்டாகலாம். திருவள்ளுவர் கூறுவதை பின்பற்றினால் எந்த நோயும் அண்டாது என்பதனால் தான், அவர் எந்த மருத்துவமும் கூறவில்லை. ஒருவேளை நோய்கள் தோன்றினால் அதை எப்படி குணப்படுத்த வேண்டும் என்பதை மிக தெளிவாக கூறியுள்ளார். பசியில்லாமல் உண்பதால்தான் அனைத்து நோய்களும் உண்டாகிறது என்றால், கிருமிகளால் உண்டாகும் நோய்கள், தொற்றுநோய்கள் மற்றும் பரம்பரை நோய்களை பற்றி திருவள்ளுவர் ஒன்றுமே கூறவில்லையே

Read More